IPL Match 54 – லக்னோ அணியை வீழ்த்திய பஞ்சாப் கிங்ஸ்

ஐ.பி.எல். தொடரின் 54வது லீக் ஆட்டம் தரம்சாலாவில் நடைபெற்றது. இதில் பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 236 ரன்களை குவித்தது. பிரப்சிம்ரன் சிங் 91, ஷ்ரேயாஸ் அய்யர் 45, ஷஷாங் சிங் 33, ஜோஷ் இங்லிஸ் 30 ரன்களை விளாசினர்.
இதையடுத்து, 237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி களமிறங்கியது. பஞ்சாப் அணியின் துல்லிய பந்து வீச்சால் பவர் பிளேவில் முக்கிய மூன்று விக்கெட்டுகளை இழந்தது.
லக்னோ அணி 78 ரன்களுக்குள் 5 விக்கெட்களை இழந்து தத்தளித்தது
6வது விக்கெட்டுக்கு ஆயுஷ் பதோனியுடன், அப்துல் சமத் ஜோடி சேர்ந்தார். 81 ரன்கள் சேர்த்த நிலையில் சமத் 45 ரன்னில் அவுட்டானார். பொறுப்புடன் ஆடிய பதோனி அரை சதம் கடந்து 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவரில் 199 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 37 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது.