IPL Match 54 – லக்னோ அணிக்கு 237 ஓட்டங்கள் இலக்கு

ஐ.பி.எல். தொடரின் 54வது ஆட்டத்தில் தரம்சாலாவில் நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொண்டு வருகிறது.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.
இதனால், களத்தில் முதலில் பஞ்சாப் அணி பேட்டிங் செய்தது. இந்த ஆட்டத்தின் முடிவில், பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்களை குவித்தது.
இதன்மூலம், இந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு 237 ரன்களை பஞ்சாப் கிங்ஸ் அணி இலக்காக நிர்ணயித்துள்ளது.
பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 91, ஸ்ரேயாஸ் ஐயர் 45, ஷஷாங் சிங் 33, ஜோஷ் இங்லிஸ் 30 ரன்களை விளாசினர்.
(Visited 1 times, 1 visits today)