செய்தி விளையாட்டு

IPL Match 50 – 100 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பை அபார வெற்றி

18வது ஐ.பி.எல். தொடரில் ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்ற 50வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 217 ரன்கள் குவித்தது.

முதல் விக்கெட்டுக்கு ரோகித் சர்மா- ரிக்கல்டன் ஜோடி 116 ரன்கள் சேர்த்த நிலையில் ரிக்கல்டன் 61 ரன்னில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய ரோகித் 53 ரன்களில் அவுட்டானார்.

அடுத்து இணைந்த சூரியகுமார் – ஹர்திக் பாண்ட்யா ஜோடி கடைசி வரை நின்றது. இருவரும் சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர்.

ஹர்திக் பாண்ட்யா, சூரியகுமார் தலா 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

இதையடுத்து, 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் களமிறங்கியது. ஆரம்பம் முதலே அந்த அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

முதல் ஓவரில் அதிரடி வீரர் சூர்யவன்ஷி டக் அவுட்டானார். 2வது ஓவரில் 2 சிக்சர் அடித்த ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தார். 4வது ஓவரில் நிதிஷ் ரானா, 5வது ஓவரில் ரியான் பராக் மற்றும் ஹெட்மயர் அவுட்டாகினர்.

இறுதியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 117 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 100 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி பெற்றது.

மும்பை அணியின் 6வது தொடர் வெற்றி இதுவாகும். அத்துடன், புள்ளிப்பட்டியலிலும் மும்பை அணி முதல் இடத்துக்கு முன்னேறியது. இந்த தோல்வியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் பிளே ஆப் வாய்ப்பை இழந்தது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!