IPL Match 48 – டெல்லிக்கு 205 ஓட்ட இலக்கை நிர்ணயித்த கொல்கத்தா

ஐபிஎல் 2025 தொடரின் 48ஆவது போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் அக்சர் படேல் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் குர்பாஸ், சுனில் நரைன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
2ஆவது ஓவரை சமீரா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை சுனில் நரைன் சிக்சருக்கு விரட்டினார். இந்த ஓவரில் 2 சிக்ஸ், 2 பவுண்டரியுடன் 25 ரன்கள் கிடைத்தன.
ரகானே 14 பந்தில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வெங்கடேஷ் அய்யர் 7 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
ரகுவன்ஷி, ரிங்கு சிங் சிறப்பாக விளையாடி ஸ்கோரை 200 நோக்கி அழைத்துச் சென்றனர். கொல்கத்தா 15 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்திருந்தது.
இறுதியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 9 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் குவித்துள்ளது.