செய்தி விளையாட்டு

IPL Match 41 – 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி தோல்வி

ஐபிஎல் தொடரின் 42வது லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஆர்சிபி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய ஆர்சிபி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தது. விராட் கோலி 42 பந்தில் 8 பவுண்டரி, 2 சிக்சருடன் 70 ரன்கள் விளாசினார்.

தேவ்தத் படிக்கல் அரை சதம் கடந்து 50 ரன்னில் அவுட்டானார். பில் சால்ட் 26 ரன்னும், டிம் டேவிட் 23 ரன்னும், ஜிதேஷ் சர்மா 20 ரன்னும் எடுத்தனர்.

இதையடுத்து, 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆடினார்.

அரை சதம் கடப்பார் என எதிர்பார்த்த நிலையில் 19 பந்தில் 3 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 49 ரன்னில் அவுட்டானார்.

நிதிஷ் ரானா 28 ரன்னும், ரியான் பராக் 22 ரன்னும் எடுத்தனர். கடைசி கட்டத்தில் துருவ் ஜூரல் அதிரடி காட்டினார். அவர் 34 பந்தில் 47 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

இறுதியில், ராஜஸ்தான் ராயல்ஸ் 194 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 11 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி வெற்றி பெற்றது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!