IPL Match 40 – 224 ஓட்டங்கள் குவித்த டெல்லி அணி
ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லியில் நடைபெற்று வரும் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி டெல்லி அணியின் பிரித்வி ஷா, மெக்கர்க் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
மெக்கர்க் வழக்கும்போல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். என்றாலும் 14 பந்தில் 23 ரன்கள் எடுத்த நிலையில் சந்தீப் வாரியர் பந்தில் ஆட்டமிழந்தார்.
அடுத்து யாரும் எதிர்பார்க்காத வகையில் அக்சர் பட்டேல் களம் இறங்கினார். பிரித்வி ஷா 7 பந்தில் 11 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷாய் ஹோப் 5 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார்.
இதனால் டெல்லி அணி பவர்பிளேயில் 3 விக்கெட் இழப்பற்கு 44 ரன்கள் மட்டுமே அடித்தது. 3 விக்கெட்டுகளையும் சந்தீப் வாரியர் கைப்பற்றினார்.
4-வது விக்கெட்டுக்கு அக்சர் பட்டேல் உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி முதலில் நிதானமாக விளையாடியது. ஓவர் செல்ல செல்ல அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. டெல்லி 10 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள் எடுத்தது.
அக்சார் பட்டேல் 37 பந்தில் அரைசதம் அடித்தார். அத்துடன் 15 ஓவரில் டெல்லி 127 ரன்னைத் தொட்டது. அக்சார் பட்டேல் 43 பந்தில் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது டெலலி 17 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்திருந்தது.
அதன்பின் ரிஷப் பண்ட் உடன் ஸ்டப்ஸ் ஜோடி சேர்ந்தார். 18-வது ஓவரில் 14 ரன்களும், 19-வது ஓவரில் 22 ரன்களும் டெல்லி அணி விளாசியது. இதற்கிடையே 18-வது ஓவரில் ரிஷப் பண்ட் 34 பந்தில் அரைசதம் விளாசினார்.
கடைசி ஓவரை மோகித் சர்மா வீசினார். முதல் பந்தில் பண்ட் 2 ரன் எடுத்தார். 2-வது பந்தில் சிக்ஸ், 3-வது பந்தில் பவுண்டரி, அதன்பின் கடைசி மூன்று பந்துகளையும் சிக்சருக்கு தூக்கினார் ரிஷிப் பண்ட்.
இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் குவித்தது.
கடைசி ஓவரில் 31 ரன்கள் டெல்லி அணிக்கு கிடைத்தது. கடைசி 3 ஓவரில் மட்டும் 67 ரன்கள் விட்டுக்கொடுத்தது குஜராத் டைட்டன்ஸ்.
ரிஷப் பண்ட் 43 பந்தில் 88 ரன்கள் எடுத்தும், ஸ்டப்ஸ் 7 பந்தில் 26 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழக்காமல் இருந்தார். குஜராத் அணியின் மோகித் சர்மா 4 ஓவரில் 73 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.