IPL Match 37 – பஞ்சாப் அணியை வீழ்த்தி பழி தீர்த்த பெங்களூரு

இந்தியன் பிரீமியர் லீக் 2025ன் 37வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மீண்டும் மோதின.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த மோதல் இன்று பஞ்சாபின் முல்லன்பூரில் உள்ள மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பஞ்சாப் 6 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்து. இதனையடுத்து 158 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பெங்களூரு களமிறங்கியது.
பிலிப் சால்ட் 1 ரன் எடுத்திருந்தபோது அர்ஷ்தீப் சிங் வேகத்தில் ஜோஷ் இங்லீஷிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய விராட் கோலி – தேவ்தத் படிக்கல் ஜோடி அதிரடியாக விளையாடி அணியை வெற்றியை நோக்கி நகர்த்தியது. இருவரும் 2 ஆவது விக்கெட்டிற்கு 103 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
தேவ்தத் படிக்கல் 4 சிக்சர் 5 பவுண்டரியுடன் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அரைச்சதம் கடந்த கோலி 73 ரன்கள் சேர்த்தார்.
ரஜத் பட்டிதார் 12 ரன்களும், ஜிதேஷ் சர்மா 11 ரன்களும் எடுத்தனர். முடிவில் ஆர்சிபி 18.5 ஓவரில் 3 விக்கெட்டை மட்டுமே இழந்து 159 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.