செய்தி விளையாட்டு

IPL Match 36 – தொடர் தோல்விகளை பதிவு செய்த பெங்களூரு அணி

ஐ.பி.எல். 2024 தொடரில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.

கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி பேட்டிங்கை தொடங்கிய கொல்கத்தா அணிக்கு துவக்க வீரரான பில் சால்ட் 14 பந்துகளில் 48 ரன்களை குவித்து அதிரடியான துவக்கத்தை கொடுத்தார்.

இவருடன் களமிறங்கிய சுனில் நரைன் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அங்ரிஷ் ரகுவான்ஷி 3 ரன்களிலும், வெங்கடேஷ் அய்யர் 16 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதன்பிறகு களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் பொறுப்பாக ஆடினார். ரிங்கு சிங் 24 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

போட்டி முடிவில் கொல்கத்தா 6 அணி விக்கெட்டுகளை இழந்து 222 ரன்களை குவித்தது. பெங்களூரு சார்பில் சிறப்பாக பந்துவீசிய யாஷ் தயால் மற்றும் கேமரூன் கிரீன் தலா 2 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ், பெர்குசன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

கடின இலக்கை துரத்திய பெங்களூரு அணிக்கு விராட் கோலி மற்றும் பாப் டு பிளெசிஸ் ஜோடி சுமாரான துவக்கத்தை கொடுத்தது. இருவரும் முறையே 18 மற்றும் 7 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். அடுத்து களமிறங்கிய வில் ஜாக்ஸ் மற்றும் பட்டிதர் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது.

இந்த ஜோடி அரைசதம் அடித்து அசத்திய நிலையில், ஜாக்ஸ் 55 ரன்களுக்கும், பட்டிதர் 52 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய கேமரூன் கிரீன் 6 ரன்களையும், லோம்ரோர் 4 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றினர்.

ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த போதிலும், பெங்களூரு அணி ரன் குவிப்பில் ஈடுபட்டது.

அதிரடியாக விளையாடிய தினேஷ் கார்த்திக் 25 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இவருடன் விளையாடிய கர்ண் ஷர்மா கடைசி வரை போராடினார். இவர் 7 பந்துகளில் 20 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

போட்டி முடிவில் பெங்களூரு அணி 221 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் கொல்கத்தா அணி 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

கொல்கத்தா சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஆன்ட்ரெ ரசல் மூன்று விக்கெட்டுகளையும், சுனில் நரைன், ஹர்ஷித் ரானா தலா இரண்டு விக்கெட்டுகளையும், வருண் சக்கரவர்த்தி மற்றும் மிட்செல் ஸ்டார்க் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

(Visited 4 times, 1 visits today)

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி