IPL Match 20 – மும்பை அணி தோல்வி

ஐபிஎல் தொடரின் 20வது லீக் ஆட்டத்தில் மும்பை-பெங்களூரு அணிகள் வான்கடே மைதானத்தில் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி – பில் சால்ட் களமிறங்கினர். இதில் சால்ட் 4 ரன்னில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் அரை சதம் அடித்து அசத்தினார். 37 ரன்னில் படிக்கல் ஆட்டமிழந்தார்.
இறுதியில் ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 221 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 222 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி வீரர்கள் ரோகித் சர்மா 17 ரன்களும், ரியான் ரிக்கல்டன் 17 ரன்களும், வில் ஜாக்ஸ் 22 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
வர்மா 29 பந்துகளில் 4 பவுண்டரி 4 சிக்ஸருடன் 56 ரன்களும், ஹர்திக் 15 பந்துகளில் 3 பவுண்டரி 4 சிக்ஸருடன் 42 ரன்களும், மிட்செல் 8 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றிபெற்றது.
இதன்படி பெங்களூரு அணி ஐ.பி.எல். 2025 தொடரில் தனது மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது.