IPL Match 20 – மும்பை அணிக்கு 222 ஓட்டங்கள் இலக்கு
ஐபிஎல் தொடரின் 20வது லீக் ஆட்டத்தில் மும்பை-பெங்களூரு அணிகள் வான்கடே மைதானத்தில் மோதி வருகின்றனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி – பில் சால்ட் களமிறங்கினர். இதில் சால்ட் 4 ரன்னில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் அரை சதம் அடித்து அசத்தினார். 37 ரன்னில் படிக்கல் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து விராட் 67 ரன்னில் பாண்ட்யா பந்து வீச்சில் அவுட் ஆனார்.
இதனையடுத்து கேப்டன் படித்தார் மற்றும் ஜித்தேஷ் சர்மா ஆகியோர் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினர்.
இதனால் ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 221 ரன்கள் எடுத்தது. மும்பை தரப்பில் ஹர்திக் பாண்ட்யா போல்ட் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.





