IPL Match 11 – சென்னை அணிக்கு ஓட்டங்கள் 183 இலக்கு

18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன.
இந்த போட்டி தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இன்றைய இரவு நேர போட்டியில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் மோதியுள்ளன.
இரு அணிகளுக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற சிஎஸ்கே பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலாவதாக களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்களை எடுத்தது.
சிஎஸ்கே பந்து வீச்சில் கலீல் அகமது, நூர் அகமது, பதிரனா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.
(Visited 1 times, 1 visits today)