IPL Match 10 – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
அதன்படி, இன்று மாலை 3.30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ், முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் மோதியுள்ளன.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் ஐதராபாத் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதில் முதலாவதாக களமிறங்கிய ஐதராபாத் அணி 18.4 ஓவர்களில் 163 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி களமிறங்கியது.
இதில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 16 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது.
இதன்மூலம், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபாரமாக வெற்றி பெற்றுள்ளது.
(Visited 1 times, 1 visits today)