IPL Match 01 – பெங்களூரு அணிக்கு 175 ஓட்டங்கள் இலக்கு

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல். தொடரின் 18வது சீசன் இன்று தொடங்குகிறது.
கடந்த 2008ம் ஆண்டு பி.சி.சி.ஐ. சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தொடர் 18வது ஆண்டாக வீறுநடை போடுகிறது.
தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை சந்திக்கிறதுஇந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.
அதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க வீரர்களாக சுனில் நரைன், டி காக் களமிறங்கினர் தொடக்கத்தில் டி காக் 4 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து ரஹானே சிறப்பாக விளையாடினார் ரஹானே சுனில் நரைன் இருவரும் இணைந்து அதிரடி காட்டினர்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 8விக்கெட் இழப்பிற்கு 174ரன்கள் எடுத்தது.
பெங்களூரு சார்பில் குருனால் பாண்டியா 3விக்கெட் வீழ்த்தினார் தொடர்ந்து 175 ரன்கள் இலக்குடன் பெங்களூரு அணி விளையாடுகிறது.