IPL 2025 : கேப்டனாக மீண்டும் களமிறங்கும் விராட் கோலி?
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியை விராட் கோலி கேப்டனாக வழிநடத்திச் செல்லவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
விராட் கோலி கேப்டனாக செயல்படப்போவது என்பது புதிதான விஷயம் இல்லை. இதற்கு முன்பு 2011 முதல் 2021 வரை பெங்களூர் அணியில் கேப்டனாக கோலி தான் செயல்பட்டார்.
ஐபிஎல் வரலாற்றில் இதுவரை தங்கள் உரிமையால் வெளியிடப்படாத மிகச் சில வீரர்களில் விராட் கோலியும் ஒருவர். இதுவரை அவருடைய கேப்டன்சியில் நான்கு முறை பிளேஆஃப்களுக்கு சென்றுள்ளது.
2021-ஆம் ஆண்டுக்குப் பிறகு தான் கேப்டனாக செயல்படவில்லை என விராட் கோலி அறிவித்த பின் தற்போது வரை டு பிளெசிஸ் அணியின் கேப்டனாக உள்ளார்.
இந்த சுழலில், அணியை விராட் கோலி மீண்டும் வழிநடத்தினால் சரியாக இருக்கும் என்பதால் இந்த முடிவினை அணி நிர்வாகம் எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இன்னும் இது குறித்து அந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எது எப்படியோ இந்த தகவல் விராட் கோலி ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தியாகவும் அமைந்துள்ளது.