களுத்துறை மாணவி பணத்திற்கு விற்கப்பட்டுள்ளார்!! விசாரணையில் வெளியான தகவல்
களுத்துறை விடுதி ஒன்றின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த பாடசாலை மாணவி பணத்திற்காக விற்கப்பட்டுள்ளதாக களுத்துறை நீதவான் நீதிமன்றில் இன்று தெரியவந்துள்ளது.
உயிரிழந்த பெண்ணின் தோழியின் காதலன் பிரதான சந்தேக நபரை சந்திப்பதற்காக குறித்த மாணவிக்கு 20,000 ரூபா தொகையை கோரியுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, குறித்த இளைஞரின் கணக்கில் பிரதான சந்தேக நபர் 12,000 ரூபாவை வரவு வைத்துள்ளதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட உயிரிழந்த பாடசாலை மாணவியின் 19 வயதுடைய தோழி, அவரது காதலன் மற்றும் பிரதான சந்தேகநபரின் சாரதி ஆகியோரை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு களுத்துறை பிரதான நீதவான் நிதா ஹேமமாலி ஹல்பண்தெனிய உத்தரவிட்டார்.
மைனர் சிறுமியை விடுதியில் தங்க வைத்த குற்றச்சாட்டின் பேரில், தேசிய அடையாள அட்டையை உரிய முறையில் பரிசோதிக்காமல் சிறையில் அடைத்த கட்டிட உரிமையாளரின் மனைவியை 02 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டது.
சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் அனைவரிடமும் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நீதிமன்றம் இன்று (15) அனுமதி வழங்கியது.
சந்தேகநபர்களின் வங்கிக் கணக்குகள் தொடர்பான அறிக்கையைப் பெற்றுக்கொள்ளவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சந்தேகநபர்களின் சட்டத்தரணிகள் பிணை கோரிய போதிலும், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது.
சந்தேகநபர்கள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டதுடன் உயிரிழந்த மாணவியின் தாயார் மாணவிக்கு நீதி கோரி அவரது உறவினர்கள் மற்றும் பிரதேசவாசிகள் நீதிமன்றத்திற்கு முன்பாக மௌனப் போராட்டத்தை நடத்தினார்.