Instagramஇல் புதிய மாற்றங்கள் அறிமுகம்
பிரபல சமூக ஊடகத்தளமான Instagramஇல் புதிய மாற்றங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
குறுகிய காணொளி, குறுஞ்செய்தி அனுப்பும் வசதியில் மாற்றம் வருகிறது. செயலியைத் திறந்தவுடன் இரண்டு அம்சங்களையும் காணும் வசதியை எதிர்பார்க்கலாம்.
Instagram முன்பு புகைப்படங்களைப் பதிவு செய்வதற்கு அதிகமாகப் பயன்பட்டது. இப்போது காணொளி பிரபலமாகிவிட்டது.
மாதந்தோறும் 3 பில்லியன் பேர் Instagram பக்கத்தைப் பயன்படுத்துகின்றனர். TikTok – Instagram போட்டி நீடிக்கிறது.
இந்நிலையில் புதிய மாற்றங்கள் வருகின்றன. செயலியில் பிரபலமாக இருக்கும் வசதிகளை வளர்ச்சிக்குச் சாதகமாகப் பயன்படுத்தலாம் என்று நிறுவனம் முடிவெடுத்திருக்கிறது.
பயனீட்டாளர்கள் காண விரும்புவதை அவர்களிடம் கொண்டு செல்ல முயற்சி எடுக்கப்படுகிறது. மாற்றம் வருவதற்கு முன்பு சோதித்துப் பார்க்கப்படும்.
இந்தியா, தென் கொரியா ஆகிய நாடுகளில் அடுத்த மாதம் முதல் புது மாற்றம் சோதிக்கப்படும்.





