அறிவியல் & தொழில்நுட்பம்

WhatsAppஇல் AI சாட் மற்றும் வாய்ஸ் காலிங் அறிமுகம்…!

வாட்ஸ்அப் வெறும் ஒரு மெசேஜ் அப்ளிகேஷன் என்பதையும் தாண்டி, அடுத்தடுத்த கட்டத்திற்கு மெட்டா நிறுவனம் அதனை கொண்டு செல்கிறது. மியாமியில் நடைபெற்ற ஒரு நிகழ்வின்போது வாட்ஸ்அப் பிசினஸ் தளத்தில் மூன்று மிகப்பெரிய மாற்றங்கள் செய்யப்பட இருப்பதை மெட்டா நிறுவனம் வெளியிட்டது.
மார்க்கெட்டிங் செய்வதை எளிமைப்படுத்துவதற்கும், AI விரும்பும் கஸ்டமர்களுக்கான ஆதரவை வழங்கவும், வாய்ஸ் மற்றும் வீடியோ மூலமாக தகவல் தொடர்பை மேம்படுத்தவும் இந்த மாற்றங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்தது.

அதன்படி, இனி தொழில் செய்பவர்கள் மெட்டாவின் ஆட் மேனேஜர் பயன்படுத்தி வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் மூலமாக பிரச்சாரங்களை உருவாக்கி, அதனை நிர்வாகிக்கலாம். வாடிக்கையாளர் பட்டியலை அப்லோடு செய்த உடனேயே வாட்ஸ்அப் பிரச்சாரங்களை மேனுவலாக ஒவ்வொருவருக்கும் அனுப்பலாம் அல்லது மெட்டாவின் அட்வான்டேஜ் + AI மூலமாக ஆட்டோமேட்டிக்காகவே அப்லோடு செய்யப்பட்ட வாடிக்கையாளர் பட்டியலுக்கு பிரச்சாரங்கள் அனுப்பப்படும். இந்த புதிய ad placements என்பது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அம்சத்தைப் போல செயல்படுகிறது.

இதன் மூலமாக தொழில் செய்பவர்கள் தங்களுடைய மார்க்கெட்டிங்கை ஒழுங்குபடுத்தலாம். அதிலும் குறிப்பாக குறுகிய கால டீல்கள் வழங்குவதற்கு அல்லது குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்களை இலக்காக வைப்பதற்கு இந்த அம்சம் உதவியாக இருக்கும்.

அடுத்தபடியாக AI மூலமாக இயங்கும் பிசினஸ் அசிஸ்டென்டுகள் வாட்ஸ்அப்பில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தனிப்பட்ட ப்ராடக்ட் பரிந்துரைகள் வழங்க, கஸ்டமர்களுக்கு பிரவுஸ் ஆப்ஷன்களுக்கு உதவ, எப்படி செக்-அவுட் செய்வது என்பது சம்பந்தமான வழிகாட்டுதல் வழங்குவதற்கு மற்றும் ஒரு பொருளை வாங்கிய பிறகு செய்யப்படும் பாலோ-அப்பை எப்படி கையாளுவது என்பது போன்ற விஷயங்களில் AI உதவப் போகிறது.

எளிமையாக சொல்லப்போனால், ஒரு கஸ்டமர் ஷாப்பிங்கில் ஈடுபடும் ஆதி முதல் அந்தம் வரையிலான முழுமையான பயணத்தை வேறு எந்தவொரு அப்ளிகேஷன் அல்லது வெப்சைட் இல்லாமல் வாட்ஸ்அப் மூலமாகவே ஆரம்பித்து முடிக்கலாம். இந்த குறிப்பிட்ட கருவியானது தற்போது மெக்சிகோவில் விரிவுப்படுத்தப்பட்டு வருவதாகவும், கூடிய விரைவில் மற்ற சந்தைகளிலும் அறிமுகப்படுத்தப்படும் என்றும் மெட்டா கூறியுள்ளது.

மூன்றாவது மற்றும் மிகவும் முக்கியமான ஒரு மாற்றமாக வாடிக்கையாளர் ஆதரவு குழுக்களுக்கு வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் அம்சத்தை வாட்ஸ்அப் பிசினஸ் தளத்தில் அறிமுகப்படுத்த உள்ளது. கஸ்டமர்கள் இந்த ஆப்ஷனை தேர்வு செய்தபிறகு, தொழில் செய்து வருபவர்களால் வாய்ஸ் மற்றும் வீடியோ கால்கள் மூலமாக வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு, சந்தேகங்களை உடனுக்குடன் தெளிவுப்படுத்த இது உதவும். அதே சமயத்தில் வாய்ஸ் நோட்ஸ் சம்பந்தப்பட்ட ஆதரவையும் வாட்ஸ்அப் சேர்க்க உள்ளது. இது குறிப்பாக டெலிஹெல்த், ஃபைனான்ஸ் மற்றும் கல்வி போன்ற துறைகளுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குவதற்கு உதவியாக இருக்கும்.

(Visited 4 times, 1 visits today)

SR

About Author

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்