உலகம் முழுதும் இணையச் சேவையில் ஏற்பட்ட தடங்கல் – சிங்கப்பூர் வெளியிட்ட அறிவிப்பு

உலகம் முழுதும் இணையச் சேவையில் ஏற்பட்ட தடங்கல் படிப்படியாகச் சீரமைக்கப்படுவதாகவும் பல இடங்களில் சேவைகள் வழக்க நிலைக்குத் திரும்பியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விமானப் பயணத்துக்காக இனி 3 மணி நேரத்திற்கு முன்பே பயணிகள் வரத் தேவையில்லை என்று சிங்கப்பூரின் Scoot நிறுவனம் அறிவித்தது.
முன்னதாக, சாங்கி விமான நிலையத்தில் பயணிகள் நீண்ட வரிசைகளில் பல மணி நேரம் காத்திருந்தனர். Scoot, Firefly, Jetstar உட்பட பத்துக்கும் மேற்பட்ட விமானச்சேவைகள் பாதிக்கப்பட்டன.
Singapore Airlinesஇன் வாடிக்கையாளர் சேவை நிலையத்தின் சேவைகளும் வழக்க நிலைக்குத் திரும்பின.
Singpost நிறுவனத்தின் சேவைகள் அனைத்தும் சுமூகமாக உள்ளன. ஜெர்மனி, தாய்லந்து, பிரிட்டன் ஆகிய நாடுகளில் சுகாதாரச் சேவைகள் தடைபட்டன.
(Visited 31 times, 1 visits today)