செய்தி

மணிப்பூரில் இணைய முடக்கம் 2 நாட்களுக்கு நீட்டிப்பு

மணிப்பூர் அரசு மொபைல் இணையம் மற்றும் தரவு சேவைகள் இடைநிறுத்தத்தை மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உள்துறை ஆணையர் என். அசோக் குமார் தனது உத்தரவில்: நிலவும் சட்டம்-ஒழுங்கு நிலவரத்தை கருத்தில் கொண்டு, 7 மாவட்டங்களில் மொபைல் இணையதளம் மற்றும் டேட்டா சேவைகள் முடக்கத்தை மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளது என குறிப்பிட்டார்.

நவம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் ஜிரிபாம் மாவட்டத்தில் காணாமல் போனவர்களின் 6 உடல்கள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து நவம்பர் 16 அன்று இம்பால் கிழக்கு மற்றும் இம்பால் மேற்கு உள்ளிட்ட பள்ளத்தாக்கு மாவட்டங்களில் வன்முறைகள் ஆரம்பித்தன.

இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, பிஷ்ணுபூர், தௌபால் மற்றும் கக்சிங் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!