ஐரோப்பா செய்தி

சுவிட்சர்லாந்தில் இணைய மோசடி குற்றங்கள் அதிகரிப்பு

சுவிட்சர்லாந்தில் தொடர்ச்சியாக இணைய மோசடிகள் இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகிறது. இணைய மோசடி அறிக்கைகள் 2023 இன் இரண்டாம் பாதியில் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மோசடியான வேலை வாய்ப்புகள் மற்றும் காவல்துறையில் இருந்து வரும் அழைப்புகள் போலி மின்னஞ்சல்கள் மற்றும் போலி விளம்பரங்கள் என பல முறைகளில் மோசடிகள் இடம்பெறுவதாக சைபர் செக்யூரிட்டிக்கான புதிய பெடரல் அலுவலகம் கடந்த திங்கட்கிழமை அறிவித்துள்ளது.

இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் 30,331 இணையச் சம்பவங்களின் அறிக்கைகள் பெறப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டு இதே காலத்தில் 16,951 ஆக இருந்தது என்று ஒரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வளர்ந்துவரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை வைத்தும் பல மோசடிகள் சுவிட்சர்லாந்தில் இடம்பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சுவிட்சர்லாந்தின் உத்தியோகபூர்வ கிரிமினல் போலீசாரின் இணையத்தளம் அண்மையில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.

அதில் சுவிட்சர்லாந்தில் பரவலாக பயன்படுத்தப்படும் ரியூட்டி என்கின்ற ஆன்லைன் கொள்வனவு இணையத்தளம் போன்ற போலி இணையத்தளத்தை உருவாக்கி அதன் மூலம் மோசடி இடம்பெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளது.

உண்மையான இணையத்தளத்தில் இருந்து பொருட்களின் தகவல்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி அவர்கள் அதனை வாங்க விரும்பம் தெரிவித்தபின்னர் கொள்வனவு செய்வதற்கான லிங் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

பின்னர் அவர்கள் அந்த லிங்கை கிளிக் செய்தவுடன் அதே பொருளுடன் அவர்கள் வடிவமைத்து வைத்த அதே போன்ற போலி இணையத்தளம் ஓபன் ஆகிறது.

பின்பு வாடிக்கையாளர்கள் போலியான இணையத்ளத்தில் தங்களது கிரடிட் காட்டு தகவல்களை வழங்கி பணம் செலுத்துவதாகவும் குறித்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது போன்ற சம்பவத்தில் பாதிக்கப்பட்டுவர்களால் சைபர் போலீசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

(Visited 11 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி