ஷுப்மன் கில்லுக்கு அபராதம் விதிக்க சர்வதேச கிரிக்கெட் சபை நடவடிக்கை

அண்மையில் நடந்து முடிந்த உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆட்டமிழப்பை விமர்சித்த இந்திய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷுப்மன் கில்லுக்கு அபராதம் விதிக்க சர்வதேச கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, அவரது போட்டி கட்டணத்தில் இருந்து 15% அபராதமாக வசூலிக்க கிரிக்கெட் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா-அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான போட்டியில் அவுஸ்திரேலிய அணி 209 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் நான்காவது நாள் ஆட்டத்தில் கெமரூன் கிரீன் எடுத்த கெட்ச்சால் ஷுப்மன் கில் ஆட்டமிழந்த நிலையில், அந்த கெச்சை பற்றி ஷுப்மன் கில், விமர்சனக் கருத்துக்களைத் முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
(Visited 17 times, 1 visits today)