இங்கிலாந்தில் கோடை காலத்திற்குள் குறையும் வட்டி விகிதம் – பிரபல நிபுணர் கணிப்பு!
இங்கிலாந்து தனது வட்டி விகிதங்களை இந்த வருடத்தின் கோடை காலத்திற்குள் 2.75 சதவீதமாகக் குறைக்கக்கூடும் என்று நிதி நிபுணர் பில் பாபடகிஸ் ( Bill Papadakis) கணித்துள்ளார்.
வேலையின்மை அதிகரிப்பு மற்றும் சேவைகள் பணவீக்கம் குறைந்து வருவது ஆகியவை பொருளாதாரத்தை ஆதரிக்க பணவியல் கொள்கைக் குழுவை வேகமாகச் செயல்படத் தூண்டும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இருப்பினும், இந்த கணிப்பு ஒரு விதிவிலக்கானது. காரணம் மற்ற பொருளாதார ஆய்வாளர்கள் குறைவான விகிதக் குறைப்புகளை எதிர்பார்க்கின்றனர்.





