அமெரிக்காவில் மீண்டும் குறைக்கப்பட்ட வட்டி விகிதம்
அமெரிக்காவில் மீண்டும் வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதாக ன் மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இம்முறை அது கால் விகிதம் புள்ளி குறைக்கப்பட்டுள்ளது.
வட்டி விகிதத்தைத் தணிக்கும் போக்கு கூடிய விரைவில் முடிவுறக்கூடும் என்பதற்கு அறிகுறியாக அது கருதப்படுகிறது.
மேலும் அமெரிக்காவின் அடுத்த அதிபராகவிருக்கும் டோனல்ட் டிரம்ப்பின் தலைமைத்துவத்தின் கீழ் பல நிச்சயமற்ற சூழல்கள் ஏற்படக்கூடும் என்ற கருத்து நிலவுகிறது. அவற்றைக் கையாள்வதற்கு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
தற்போது கடன்களுக்கான வட்டி விகிதம் 4.25 முதல் 4.5 சதவீதம் வரை உள்ளது.
தொடர்ந்து மூன்றாவது முறையாக அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.
(Visited 1 times, 1 visits today)