ஜேர்மனிக்கும் ரஷ்யாவிற்கும் இடையில் தீவிரம் அடையும் முறுகல்: வெளிவரும் இரகசிய தகவல்கள்?
ஜேர்மன் தொடர்பில் கசிந்த விவாதங்கள் ஐரோப்பாவில் போருக்கான பசி இன்னும் மிக அதிகமாக உள்ளதாக ரஷ்யா சாடியுள்ளது. போர்க்களத்தில் ரஷ்யாவின் மூலோபாய தோல்வியை” உறுதி செய்வதே நோக்கமாக உள்ளதாக ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
ரஷியாவின் முன்னாள் அதிபர் டிமிட்ரி மெட்வடேவ் , “ரஷ்யாவுடன் ஜெர்மனி போருக்குத் திட்டமிட்டுள்ளது” என்றும் குற்றச்சாட்டியுள்ளார்.
இதேவேளை, ஜேர்மனிக்கு எதிராக தகவல் போரை ரஷ்ய மேற்கொண்டு வருவதாக, ஜேர்மனியின் பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் தெரிவித்துள்ளார்.
ஜெர்மனியில் அவநம்பிக்கை மற்றும் கருத்து வேறுபாடுகளை விதைக்க ரஷ்யா விரும்புவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
(Visited 6 times, 1 visits today)