அறிவியல் & தொழில்நுட்பம்

இன்ஸ்டாகிராமின் புதிய ‘எடிட்ஸ்’ செயலி அறிமுகம்!

“எடிட்ஸ்” என்ற பெயரில் இன்ஸ்டாகிராம் புதிய வீடியோ எடிட்டிங் ஆப்-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் வீடியோக்களை கிரியேட்டிவாகவும் எளிமையாகவும் எடிட் செய்யலாம். இது மிகவும் எளிமையான மற்றும் ஆரம்ப நிலையில் இருக்கும் கிரியேட்டர்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு சிறந்த எடிட்டிங் டூலாக பார்க்கப்படுகிறது.

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் இன்ஸ்டாகிராம் வீடியோக்களை பலர் கிரியேட்டிவாக எடிட் செய்திருப்பதை பார்த்திருப்போம். அதற்கு எடிட்டிங் துறையில் அனுபவம் தேவைப்படும். இந்நிலையில், இந்த சிக்கலை போக்க எடிட்ஸ் என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எடிட்டிங் செய்ய சில செயலிகள் கட்டணங்கள் வசூலிக்கின்றன. இன்ஸ்டாவில் கட்டணம் இல்லாமல் இலவசமாக எடிட் செய்துகொள்ளலாம் என்று தெரிகிறது.

சிறப்பம்சங்கள்: இந்த எடிட்ஸ் செயலி வீடியோக்களை எளிமையாகவும் கிரியேட்டிவாகவும் எடிட் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த செயலியின் UI மிகவும் நேர்த்தியானது. நீங்கள் ஆரம்ப நிலை க்ரியேட்டராக இருந்தாலும் அல்லது நீங்கள் ஏற்கனவே இன்ஸ்டா லெஜெண்டாக இருந்தாலும் உங்களுக்கு ஏற்ற வகையில் வீடியோவை எடிட் செய்யலாம். வீடியோவை எடிட் செய்ததும் நேரடியாக இன்ஸ்டாகிராமில் நேரடியாக ரீல்ஸாகவும் ஸ்டோரியாகவும் பகிரலாம். தனியாக டவுன்லோடு செய்து அப்லோடு செய்ய வேண்டியதில்லை. வீடியோ எடிட்டிங் நேரத்தை குறைத்து, உங்கள் கற்பனை, ஐடியா போன்றவற்றுக்கு அதிக நேரம் செலவழிக்கலாம்.

வேறு எந்த தளங்களிலும் எடிட் செய்தாலும் வாட்டர் மார்க்குடன் வரும். ஆனால் இந்த எட்டிஸ்ல் வாட்டர் மார்க் வராது. இதனால் ஒரிஜினல் வீடியோ போல அப்லோடு செய்யலாம். ஏஐ அனிமேஷன் மூலம் கிரீன் ஸ்கிரீன் இல்லாமலே உங்களது வீடியோவின் பேக்ரவுண்டை மாற்றலாம். வீடியோவின் தரத்தை இழக்காமல் உங்கள் வீடியோ என்ன குவாலிட்டியோ அதனை நேரடியாக அப்லோடு செய்யலாம். அதே போல பேக்ரவுண்ட் சவுண்ட்-ஐ நீக்கி நல்ல கிளாரிட்டியான சவுண்டுடன் அப்லோடு செய்யலாம். வீடியோக்களுக்கு நீங்கள் விரும்பும் மொழிகளில் சப்டைட்டில் உருவாக்க முடியும்.

ஆப் ஸ்டோர் அல்லது கூகுள் ப்ளே ஸ்டோரில் எடிட்ஸ் ஆப்பை டவுன்லோடு செய்யவும். உங்கள் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் மூலம் லாகின் செய்யவும். உங்கள் மொபைலில் இருந்து நேரடியாக வீடியோக்களை அப்லோடு செய்யலாம். எடிட்டிங் பேனலுக்கு சென்று வீடியோக்களுக்கு ஏற்ற வகையில் ஏஐ அனிமேஷன், பேக்ரவுண்ட் மாற்றம், ஃபில்டர்ஸ் போன்ற அம்சங்களை பயன்படுத்தலாம். பின்னர் வாட்டர் மார்க் இல்லாமல் எக்ஸ்போர்ட் செய்து இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், யூடியூப் போன்ற தளங்களில் பகிரலாம்.

(Visited 3 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்
Skip to content