இலங்கை

இலங்கை இராஜதந்திரியின் வீட்டில் பணிபுரிந்த பெண்ணிற்கு இழைக்கப்பட்ட அநீதி! அவுஸ்திரேலிய நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

அவுஸ்திரேலியாவுக்கான இலங்கையின் முன்னாள் பிரதி உயர்ஸ்தானிகர் கன்பராவில் மூன்று வருடங்களாக ஒரு நாளைக்கு 90 சதத்திற்கும் குறைவாக சம்பளம் வழங்கிய ஒரு வீட்டுப் பணியாளருக்கு மேலும் $117,000 வழங்குமாறு அவுஸ்திரேலிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

ஹிமாலி அருணதிலக, 2015 மற்றும் 2018 க்கு இடையில் அவுஸ்திரேலியாவுக்கான இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராகப் பணியாற்றியுள்ளார்.

ஹிமாலி அருணதிலகாவின் வீட்டுப் பணிப்பெண்ணாக பிரியங்கா தனரத்னா 2015 இலிருந்து
பணிபுரிந்தார்,

அவளுக்கு ஆங்கிலம் படிக்கவோ, பேசவோ தெரியாது, இந்நிலையில் அருணாதிலகவினால் அவளது கடவுச்சீட்டைப் பறிமுதல் செய்தார்.

தனரத்னா வாரத்தில் ஏழு நாட்களும் காலை 6:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை சுமார் மூன்று வருடங்கள் வேலை செய்ததாக பெடரல் கோர்ட் விசாரித்தது,

சமைத்தல், சுத்தம் செய்தல் மற்றும் சலவை செய்தல் உட்பட பிரதி உயர்ஸ்தானிகருக்கான “அனைத்து வீட்டு வேலைகளையும்” அவர் மேற்கொள்வார்,

மேலும் சில வேளைகளில் ஹிமாலி அருணதிலக்க பொழுது போக்கு விருந்துகளில் ஈடுபடும்போது, அதிகாலை ஒரு மணிவரை தாம் பணியாற்ற வேண்டியிருந்ததாக பிரியங்கா குற்றம் சுமத்தியிருந்தார்.

“நான் தனியாக கடைகளுக்குச் செல்லவோ அல்லது வீட்டிற்கு வெளியே வேறு வேலைகளைச் செய்யவோ அனுமதிக்கப்படவில்லை. சில சமயங்களில் அருணாதிலகா நான் ஏதாவது வாங்க விரும்பினால் என்னை கடைகளுக்கு அழைத்துச் செல்வார்.

தனது கடவுச்சீட்டை உயர்ஸ்தானிகர் பெற்றுக்கொண்டதாகவும், நாட்டு வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

திருப்தியான உடை மற்றும் உணவை வழங்கவில்லை என்றும் அவர் நீதிமன்றில் குறிப்பிட்டிருந்தார்.

இந்தநிலையில் பணியாற்றிய மூன்று வருடங்களில் ஆயிரக்கணக்கான மணிநேரம் வேலை செய்தபோதும், ஒரு மணி நேரத்திற்கு 65 காசுகளுக்கும் குறைவாகவே சம்பளத்தை ஹிமாலி, பிரியங்காவுக்கு வழங்கியுள்ளதாக அவரது சட்டத்தரணிகள் கணக்கிட்டிருந்தனர்.

இந்தநிலையில் இன்று நீதிபதி வழங்கிய தீர்ப்பில், தனரத்ன மீதான தனது அதிகாரத்தையும் ஹிமாலி அத்துமீறல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பில், இராஜதந்திரிகளிடமிருந்து இதேபோன்ற நடத்தையைத் தடுப்பதற்காகவும், முன்னாள் துணை உயர் ஸ்தானிகர் நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்காத காரணத்திற்காகவும், அருணாதிலகாவுக்கு மேலும் $117,000 அபராதம் விதித்தது.

அருணாதிலகா இன்னும் பணம் எதையும் செலுத்தவில்லை என்று நீதிபதி ராப்பர் நேற்று தெரிவித்தார்.

அருணதிலகா அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேறியுள்ளார், இப்போது ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியாக உள்ளார்.

 

(Visited 2 times, 2 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்