இலங்கை செய்தி

ஜயரத்ன மலர்சாலைக்கு மிரட்டல் விடுத்த தொலைபேசி இலக்கம் தொடர்பில் வெளியான தகவல்

சுரேந்திர வசந்த பெரேரா என அழைக்கப்படும் கிளப் வசந்தாவின் சடலத்தை அடக்கம் செய்ய வேண்டாம் என தனியார் மலர்சாலைக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட அழைப்பு மாத்தளை பிரதேசத்தில் வசிக்கும் கொழும்பில் உள்ள தனியார் பல்கலைக்கழக மாணவர் ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட சிம் கார்ட் ஊடாக வந்துள்ளதாக பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

எனினும் குறித்த மாணவர் அந்த சிம்மை பயன்படுத்தவில்லை எனவும் அதனை பயன்படுத்தி அழைப்பை மேற்கொண்ட நபரை கண்டறிய விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அந்த அழைப்புகள் மூலம் விசாரணையை தவறாக வழிநடத்தும் முயற்சி நடந்துள்ளதாக பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

இதேவேளை, கடந்த 8ஆம் திகதி கிளப் வசந்த என்ற சுரேந்திர வசந்த பெரேரா மற்றும் மற்றுமொருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அதுருகிரிய பச்சை குத்தும் நிலையத்தின் உரிமையாளர் துலான் சஞ்சுல கொழும்பு விளக்கமறியலில் இருந்து மஹர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அவரது பாதுகாப்பு கருதி நேற்று (14) மஹர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.

எதிர்வரும் ஜூலை மாதம் 22ஆம் திகதி மீண்டும் கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகவுள்ள அவர், அன்றைய தினம் இரகசிய வாக்குமூலமொன்றை வழங்குவதற்கு அனுமதிக்குமாறு நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனிடையே துப்பாக்கிச்சூடு தாக்குதலில் படுகாயமடைந்த பிரபல பாடகர் கே.சுஜீவா மற்றும் கிளப் வசந்தாவின் மனைவியும் டாட்டூ பார்லர் உரிமையாளரின் மனைவி ஆகியோர்  தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இவர்களில் கிளப் வசந்தாவின் மனைவி கவலைக்கிடமான நிலையில் களுபோவில போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

(Visited 4 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை