இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ் ஐயரின் தற்போதைய நிலைமை தொடர்பில் வெளியான தகவல்
ஆஸ்திரேலிய அணியுடன் சிட்னியில் நடந்த போட்டியில் காயமடைந்த இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் (Shreyas Iyer) குணமடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அலெக்ஸ் கேரி (Alex Carey) அடித்த பந்தை ‘கேட்ச்’ செய்யும் போது இடறி விழுந்ததால், ஷ்ரேயாஸ் ஐயரின் இடது பக்க கீழ்ப்புற நெஞ்சுக் கூட்டில் பலத்த உள் காயம் ஏற்பட்டிருந்தது.
இதையடுத்து அவருக்கு மண்ணீரலில் கிழிவு ஏற்பட்டுள்ளது எனவும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் தற்போது அவர் பொதுப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
விரைவில் ஷ்ரேயாஸ் குடும்பத்துடன் இணைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரத்தத்தை வடிகட்டுவது, கிருமிகளுக்கு எதிராக செயல்படும் வெள்ளை அணுக்களை அனுப்பி அழிப்பது, கிருமிகளுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை உற்பத்தி செய்வது, நமது இரத்தத்தின் இரும்புச் சத்தை மறு சுழற்சி செய்வது போன்ற பல பணிகளை மண்ணீரல் செய்து வருகிறது என பொதுநல மருத்துவர் பாரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.





