அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பாக அமைச்சர் வெளியிட்ட தகவல்
 
																																		தற்போதைய சூழ்நிலையில் சம்பளத்தை அதிகரிப்பதற்கு போதிய வருமானம் கிடைக்க வேண்டுமானால் திறைசேரிக்கு கூடுதல் பணம் காணப்பட வேண்டும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று (31) நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பொதுச் சொத்துக்களை விற்பது, வரிகளை மேலும் அதிகரிப்பது, புதிய வரிகளை விதிப்பது போன்றவற்றைக் கண்டுபிடிப்பதற்கான வழிகள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக ஏதாவது ஒரு வகையில் சம்பள அதிகரிப்பை வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
(Visited 9 times, 1 visits today)
                                     
        



 
                         
                            
