இலங்கையின் செலுத்தப்படாத கடன் தொகை குறித்து அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக செலுத்தப்படாத கடன் தொகை 13 வீதமாக அதிகரித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு பொருளாதார ஸ்திரத்தன்மை இரண்டு சதவீதத்திற்கும் அதிகமான பொருளாதார வளர்ச்சியை அடையும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி சமர்ப்பித்த பிரேரணையின் பிரகாரம் பொலிஸ் உத்தியோகத்தர்களின் அதிகரிக்கப்பட்ட உணவு, பயண மற்றும் தங்குமிட கொடுப்பனவை அடுத்த வாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய வலியுறுத்தியுள்ளார்.
(Visited 13 times, 1 visits today)