உலகின் மிக ஆபத்தான பொழுதுபோக்குகள் குறித்து வெளியான தகவல்
உலகின் மிக ஆபத்தான பொழுதுபோக்குகள் குறித்து சமீபத்திய ஆய்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
iaminsured.co.uk என்ற ஒப்பீட்டு இணையதளத்தின்படி, பொழுது போக்கு எவ்வாறு உயிருக்கு ஆபத்தான அனுபவங்களுக்கு இட்டுச் செல்கிறது என்பதன் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வு பொழுதுபோக்கின் போது ஏற்படும் விபத்துகளை கணக்கில் எடுத்துக்கொண்டு ரக்பியை உலகின் மிக ஆபத்தான பொழுது போக்கு என பெயரிட்டுள்ளது.
கால்பந்து உலகின் இரண்டாவது ஆபத்தான பொழுதுபோக்காக கருதப்படுகிறது மற்றும் ஸ்கைடிவிங் உலகின் மூன்றாவது மிகவும் ஆபத்தான பொழுதுபோக்காக உள்ளது.
மேலும் நீருக்கடியில் டைவிங் செய்வது இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான பொழுதுபோக்காக இருந்தாலும், இது உலகின் 4வது மிகவும் ஆபத்தான பொழுதுபோக்காக கூறப்படுகிறது.
மோட்டோகிராஸ் பொழுதுபோக்கு உலகின் மிகவும் ஆபத்தான பொழுதுபோக்குகளில் ஒன்றாகும், மேலும் குதிரை சவாரி உலகின் மிகவும் ஆபத்தான பொழுதுபோக்குகளில் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளது.
7 – Motorsport
8 – Snowsports
9 – Paragliding
10 – Rock Climbing