இலங்கையில் வாகனங்களின் விலை குறித்து வெளியான தகவல்!

இலங்கையில் இந்த ஆண்டு வாகன இறக்குமதியில் வரி திருத்தங்கள் எதுவும் இருக்காது என அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, இந்த ஆண்டு சந்தையில் வாகன விலைகளில் எவ்வித மாற்றமும் இருக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் வாகன இறக்குமதியிலிருந்து இந்த ஆண்டு 300 மில்லியன் முதல் ரூ.350 பில்லியன் ரூபாய் வருவாயை எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தின்படி இந்த ஆண்டில் எந்த வரிச் சலுகைகளையும் வழங்க முடியாது என்றும் வெளிப்படையாகக் குறிப்பிட்டுள்ளார்.
மின்சார மற்றும் மறுசீரமைக்கப்பட்ட வாகனங்கள் உட்பட பல்வேறு வாகன மாதிரிகள் நாட்டிற்கு வந்துள்ளன.
இருப்பினும், சுங்க அனுமதி இன்னும் நடந்து கொண்டிருப்பதால், மொத்த வரி வருவாயை அரசாங்கத்தால் இன்னும் கணக்கிட முடியவில்லை என குறித்த அதிகாரி தெரிவித்தார்