இலங்கையில் Snapchat பயன்படுத்தும் பயனர்கள் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் மிகவும் குறைவானோர் பயன்படுத்தும் சமூக ஊடகங்களின் பட்டியலில் Snapchat இடம்பெற்றுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
2024 டிசம்பர் 31ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட அந்த ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கையிலேயே இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையின் படி, 2024ஆம் ஆண்டில் Snapchat பயன்பாட்டாளர்களின் மொத்த எண்ணிக்கை 4,012,121 ஆக பதிவாகியுள்ளது.
இதேவேளை, நாட்டில் அதிகளவில் பயன்படுத்தப்படும் சமூக ஊடக வலையமைப்பாக Facebook தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த தரவுகள், இலங்கையர்களின் சமூக ஊடகப் பயிற்சி முறையில் உள்ள வேறுபாடுகளையும், வலையமைப்புகள் மீதான விருப்பத்தையும் விளக்குகின்றன.
(Visited 2 times, 1 visits today)