பிரித்தானிய பிரதமர் பெற்ற வருமானம் மற்றும் செலுத்திய வரி தொடர்பில் வெளிவந்த தகவல்
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனாக் சுமார் 500,000 பவுண்ட் வரை வரி செலுத்தியுள்ளார்.
அந்தத் தகவலைப் பிரதமர் அலுவலகம் வெளியிட்டது. 43 வயதான சுனாக் 2022ஆம் ஆண்டு ஒக்டோபரில் பிரதமராகப் பதவியேற்றார். 2022-2023 நிதி ஆண்டில் அவர் 2.2 மில்லியன் பவுண்டு வருவாய் ஈட்டினார். அதற்கும் முந்திய ஆண்டைவிட அது 13 சதவீதம் அதிகமாகும்.
பிரதமராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் அவர் பெற்ற சம்பளம் சுமார் 140,000 பவுண்டு என தெரியவந்துள்ளது. எஞ்சிய 2.1 மில்லியன் பவுண்டை பங்கு, முதலீடு, வட்டி ஆகியவை மூலம் அவர் பெற்றார்.
சுனாக்கின் மனைவி அக்க்ஷதா மூர்த்தி இந்தியத் தொழிலதிபரும் பெரும் செல்வந்தருமான நாராயண மூர்த்தியின் மகளாகும். தம்பதியின் தனிப்பட்ட சொத்தின் அளவு பிரித்தானியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
(Visited 12 times, 1 visits today)