இலங்கை

காணாமல் போனதாக கூறப்பட்ட 4 சிறுவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

காலி – நெலுவ தெல்லாவ, மியானாவடுர பிரதேசத்தில் ஒரே வீட்டில் தங்கியிருந்த வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்த நான்கு சிறுவர்கள் நேற்று காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் இன்று (14) அதிகாலை அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் காலி – நெலுவ தெல்லாவ, மியானாவடுர பிரதேச பொலிஸ் நிலையத்தில் வினவிய போது காணாமல் போனதாக கூறப்படும் நான்கு சிறுவர்களும் இன்று (14) காலை கிடைக்கப்பெற்றுள்ளதாக குறித்த நான்கு சிறுவர்களின் தாய்களில் ஒருவர் கூறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்படி காணாமல் போனதாக கூறப்படும் நான்கு சிறுவர்களும் தமது வீட்டு சுற்றுச்சூழலிலே இருந்ததாக பொலிஸாருக்கு குறித்த தாய் தெரிவித்துள்ளார்.

காணாமல் போனதாக கூறப்படும் நான்கு சிறுவர்களின் பெற்றோர்களும் நெலுவ பிரதேசத்திலுள்ள தோட்டங்களில் தற்காலிகமாக தொழில் செய்வதற்காக மியானதுர பிரதேசத்தில் வாடகை வீட்டில் தங்கி தங்கியிருந்துள்ளனர்.இது தொடர்பிலான விசாரணைகளை காலி – நெலுவ தெல்லாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(Visited 4 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!