ஜெர்மனியில் வாகனங்கள் கொள்வனவு செய்ய காத்திருப்பவர்களுக்கு வெளியான தகவல்
ஜெர்மனியில் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு நிதி உதவி வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டு குறித்த ஊக்குவிப்பு திட்டம் அமுல்படுத்தப்பட்ட போதும் அதனை செயற்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
திறைசேரியில் ஏற்பட்ட பண சுருக்கம் காரணமாக, பெருந்தொகை பணத்தை சேமிக்க வேண்டிய கட்டாய நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டது.
இந்நிலையில் மின்சாரத்தில் இயங்குகின்ற வாகனங்களை கொள்வனவு செய்தில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றமை குறைந்துள்ளது.
இதனை அதிகரிக்கும் வகையில், புதிய ஊக்குவிப்பு நடவடிக்கையை அமுல்படுத்து அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
2023 ஆம் ஆண்டு வரை மொத்தமாக 3.4 பில்லியன் யுரோக்கள் மானியங்களாக அரசாங்கம் வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
(Visited 4 times, 4 visits today)