இந்தியா செய்தி

பீகார் ரயில் விபத்து குறித்து வெளியான தகவல்

டெல்லியின் ஆனந்த் விஹார் டெர்மினலில் இருந்து அசாமின் காமாக்யா நோக்கிச் செல்லும் அதிவிரைவு ரெயிலின் 6 பெட்டி பீகாரில் உள்ள ரகுநாத்பூர் ரெயில் நிலையம் அருகே நேற்று இரவு தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

இந்த விபத்துக்கான காரணம் பற்றிய விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ரெயில் விபத்து ஏற்பட தண்டவாளத்தில் இருந்த குறைபாடு தான் காரணமாக இருக்கலாம் என்று முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுதவிர ரெயில் அதிவேகமாக வந்து கொண்டிருந்த சமயத்தில், திடீரென ரெயிலை நிறுத்துவதற்கு பிரேக்-ஐ அழுத்தியதால், ரெயில் தடம்புரண்டு விபத்தில் சிக்கியதாகவும் கூறப்படுகிறது.

“நான் எழுதும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு கொண்டிருந்தேன், அப்போது திடீரென ஓட்டுனர் பிரேக்-ஐ அழுத்தியதாக உணர்ந்தேன். பிறகு, ரெயிலில் அதிர்வுகள் ஏற்பட்டு பின் மயக்கமுற்றேன்.

இதைத் தொடர்ந்து கிராம மக்கள் என் முகத்தின் மீது தண்ணீரை தெளித்தனர்,” என்று ரெயிலில் பயணித்த கார்டு விஜய்குமார் தெரிவித்தார்.

(Visited 8 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி