இலங்கையில் பன்றிகளுக்கு தொற்று நோய்
நாடளாவிய ரீதியில் பன்றிகளுக்கு தொற்று நோய் பரவி வருவதாக இலங்கை கால்நடை போக்குவரத்து மற்றும் கால்நடை உற்பத்தி விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் குலராஜ் பெரேரா இன்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பி.ஆர்.ஆர்.எஸ். பன்றிகளுக்கு நோய் பரவுகிறது என்றார்.
இதன்படி யாழ்ப்பாணம், களுத்துறை, மாத்தளை, வஹாக்கோட்டை, கலேவெல போன்ற பல பிரதேசங்களில் இந்த நோயினால் பாதிக்கப்பட்ட பன்றிகள் பதிவாகியுள்ளன.
குறித்த கால்நடைகளுக்கு பன்றி பண்ணை உரிமையாளர்கள் தடுப்பூசி போடாததே இந்நோய் பரவுவதற்கு முக்கிய காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை கால்நடை போக்குவரத்து மற்றும் கால்நடை உற்பத்தி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் குலராஜ் பெரேரா தெரிவிக்கையில், நுரையீரல் தொற்று காரணமாக இந்த பன்றிகள் நீரிழப்பு மற்றும் கடுமையான நிமோனியாவால் இறக்கின்றன.
2020 ஆம் ஆண்டு நாட்டில் முதன்முறையாக இந்நோய் பதிவாகியதாகவும், தற்போதைய நிலைமை தொடர்பில் எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை எனவும் சிரேஷ்ட வைத்தியர் ஒருவர் தெரிவித்தார்.