விளையாட்டு

INDvsZIM – மூன்றாவது போட்டியில் இந்திய அணி வெற்றி

இந்திய கிரிக்கெட்- ஜிம்பாப்வேயில் அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று நடக்கிறது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

அதன்படி களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 182 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சுப்மன் கில் 66 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜிம்பாப்வே தரப்பில் ராசா, பிளசிங் முசரபானி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனையடுத்து ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர்களாக வெஸ்லி மாதேவேரே- தடிவானாஷே மருமணி ஆகியோர் களமிறங்கினர்.

வெஸ்லி மாதேவேரே 1 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த பிரையன் பென்னட் 4, தடிவானாஷே 13, ராசா 15, ஜொனாதன் காம்ப்பெல் 1 அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர்.

இந்நிலையில் டியான் மியர்ஸ் – கிளைவ் மடாண்டே ஜோடி பொறுப்புடன் ஆடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர்.

கிளைவ் மடாண்டே 37 ரன்னில் ஆட்டமிழந்தனர். இறுதியில் டியான் மியர்ஸ் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார்.

இதனால் ஜிம்பாப்வே அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 23 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டும் ஆவேஷ் கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

(Visited 4 times, 1 visits today)
Avatar

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ

You cannot copy content of this page

Skip to content