செய்தி விளையாட்டு

INDvsENG – முதல் நாள் முடிவில் 310 ஓட்டங்கள் குவித்த இந்தியா

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் லீட்சில் நடந்த முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நேற்று தொடங்கியது. இதில் ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீசுவதாக அறிவித்தார்.

அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வாலும், லோகேஷ் ராகுலும் இந்தியாவின் இன்னிங்சை தொடங்கினர்.

2வது விக்கெட்டுக்கு கருண் நாயர் இறங்கினார். அவரும், ஜெய்ஸ்வாலும் அணியை சரிவில் இருந்து படிப்படியாக மீட்டனர்.

இதன் பின்னர் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கால்பதித்தார். கடந்த டெஸ்டில் இரு இன்னிங்சிலும் சதம் அடித்து பிரமாதப்படுத்திய பண்ட் இந்த முறை அதிக நேரம் நிலைக்கவில்லை.

இந்த சூழலில் 6வது விக்கெட்டுக்கு சுப்மன் கில்லுடன், ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா கைகோர்த்தார். இருவரும் மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டதுடன் அணியை திடமான நிலைக்கு நகர்த்தினர்.

ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 85 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 310 ரன்கள் சேர்த்துள்ளது.

(Visited 4 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி