செய்தி விளையாட்டு

INDvsENG – போராடி நான்காவது போட்டியை சமன் செய்த இந்தியா

இங்கிலாந்து, இந்தியா இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, இந்தியா முதல் இன்னிங்சில் 358 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து சார்பில் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டும், ஆர்ச்சர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 669 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்தியா சார்பில் ஜடேஜா 4 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர், பும்ரா தலா 2 விக்கெட்டும், கம்போஜ், சிராஜ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 311 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது.

நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2வது இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்துள்ளது.

இந்நிலையில், இன்று இறுதி நாள் ஆட்டம் நடைபெற்றது. 3வது விக்கெட்டுக்கு 188 ரன்கள் சேர்த்த நிலையில் கே.எல்.ராகுல் 90 ரன்னில் அவுட்டானார். சிறப்பாக ஆடிய சுப்மன் கில் சதமடித்து 103 ரன்னில் வெளியேறினார்.

5வது விக்கெட்டுக்கு வாஷிங்டன் சுந்தருடன் ஜடேஜா இணைந்தார். இந்த ஜோடி விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டது.

இறுதியில், இந்திய அணி 4 விக்கெட்டுக்கு 425 ரன்கள் குவித்தது. ஜடேஜா 107 ரன்னும், வாஷிங்டன் சுந்தர் 101 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதையடுத்து போட்டி டிராவில் முடிந்தது. தொடரில் 2-1 என இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது.

(Visited 3 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி