INDvsAUS – 333 ஓட்டங்கள் முன்னிலையில் ஆஸ்திரேலிய அணி
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் இரு அணிகள் இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.
நான்காவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாளில் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி இன்றைய ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 228 ரன்களை எடுத்துள்ளது. இதன் மூலம் அந்த அணி 333 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
பேட்டிங்கில் ஆஸ்திரேலியா சார்பில் மார்னஸ் லபுஷேன் 70 ரன்களையும், பேட் கம்மின்ஸ் 41 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த நேதன் லயன் 41 ரன்களை அடித்துள்ளார்.
இவருடன் ஆடிய ஸ்காட் போலண்ட் 10 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
இன்றைய ஆட்டநேர முடிவில் இந்தியா சார்பில் ஜஸ்பிரித் பும்ரா நான்கு விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் மூன்று விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.