இந்திய-கனடா நெருக்கடி!!!! இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு
இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான இராஜதந்திர நெருக்கடிக்கு இலங்கை அரசாங்கம் பதிலளித்துள்ளது.
அதன்படி, இந்திய-கனடா இராஜதந்திர நெருக்கடி தொடர்பாக இந்தியாவின் ஏஎன்ஐ சேனலுக்கு பேட்டியளித்த வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி, கனடாவை பயங்கரவாதிகள் பாதுகாப்பான புகலிடமாக பயன்படுத்தியுள்ளனர்.
மேலும், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எந்தவித ஆதாரமும் இல்லாமல் மூர்க்கத்தனமான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஏஎன்ஐ சேனலுக்கு தெரிவித்துள்ளார்.
எனவே கனேடிய பிரதமர் இந்தியாவை அடிப்படையாக வைத்து வெளியிடும் அறிக்கைகள் தமக்கு ஆச்சரியமளிக்கவில்லை எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
இந்தியாவுக்கு கனடா செய்தது இலங்கைக்கு செய்ததைப் போன்றது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாக கனேடிய பிரதமர் தெரிவித்த கருத்து ஆபத்தானது மற்றும் முற்றிலும் பொய்யானது என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கையில் இனப்படுகொலை நடைபெறவில்லை என்பது பலரும் அறிந்த உண்மை எனவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மேலும் தெரிவித்துள்ளார்.