பறவை மோதிய சேதமடைந்ததால் அவசரமாக தரையிறக்கப்பட்ட இண்டிகோ விமானம்

பறவை மோதியதை அடுத்து, இண்டிகோ விமானம் ஒன்று அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
நாக்பூர், கோல்கத்தா இடையே விமானச் சேவை வழங்கி வருகிறது இண்டிகோ நிறுவனம்.செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 2) நாக்பூரில் இருந்து, இண்டிகோ விமானம் 272 பயணிகளுடன் கோல்கத்தா புறப்பட்டது.
நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது அந்த விமானத்தில் திடீரென ஒரு பறவை மோதியதாகத் தெரிகிறது. இதில் அந்த விமானத்தின் முன்பகுதி சேதமடைந்தது.
அதன் பிறகு பாதுகாப்பு அம்சங்களைக் கவனத்தில் கொண்டு, விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அதை மீண்டும் நாக்பூர் நோக்கித் திருப்பினார் விமானி.
விமான நிலையத்துக்கு உரிய தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டனர்.
அதன் பின்னர், விமானத்தை ஆய்வு செய்த போது அதன் முன்பகுதி சேதம் அடைந்திருப்பது தெரியவந்தது. இந்தச் சம்பவம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.