செய்தி விளையாட்டு

டெஸ்ட் வரலாற்றில் மோசமான சாதனை படைத்த இந்தியா

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

இரு அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களுரூவில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் நேற்று தொடங்க இருந்தது.

எனினும், தொடர் மழை காரணமாக நேற்றைய ஆட்டம் தொடர்ந்து தாமதமாகி வந்தது. மழை நீடித்ததால் முதல் நாள் ஆட்டம் டாஸ் கூட போடப்படாமல் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது.

நேற்று டாஸ் போடப்படவில்லை என்பதால், இன்றைய ஆட்டம் டாஸ்-உடன் தொடங்கியது.இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துது.

மிகுந்த நம்பிக்கையுடன் பேட்டிங் தொடங்கிய இந்திய அணிக்கு கேப்டன் கேப்டன் ரோகித் சர்மா ஆட்டத்தின் 7-வது ஓவரில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். அவர் 2 ரன்னில் டிம் சவுத்தி பந்தில் ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 9 ஆக இருந்தது.

அடுத்தடுத்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 46 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நியூசிலாந்து சார்பில் ரூர்கி 4 விக்கெட்டுகளையும், மேட் ஹென்றி 5 விக்கெட்டுகளையும் டிம் சௌதி ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

(Visited 31 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி