செய்தி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி நுழைவதில் சிக்கல்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி 2-வது இடத்துக்கு சறுக்கியுள்ளது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியாவை 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி இந்திய மண்ணில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரையும் முழுமையாக கைப்பற்றியது.

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் 2-வது இடத்துக்கு சறுக்கியுள்ளது. இந்திய அணியின் வெற்றி சதவிகிதம் 62.82 சதவிகிதத்திலிருந்து 58.33 சதவிகிதமாக குறைந்துள்ளது.

ஆஸ்திரேலிய அணி 62.50 சதவிகித வெற்றிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. 55.56 சதவிகித வெற்றிகளுடன் இலங்கை அணி மூன்றாவது இடத்திலும், 54.55 சதவிகித வெற்றிகளுடன் நியூசிலாந்து அணி நான்காவது இடத்திலும், 54.17 சதவிகித வெற்றிகளுடன் தென்னாப்பிரிக்க அணி ஐந்தாவது இடத்திலும் உள்ளன.

முதலிடத்தில் வலுவான நிலையில் இருந்த இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முடிவில் அதன் இடத்தை ஆஸ்திரேலியாவிடம் இழந்துள்ளது. இந்த நிலையில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் தொடர் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இந்திய அணிக்கு இன்னும் 5 போட்டிகள் மட்டுமே இருக்கின்றன. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த 5 போட்டிகளில் இந்திய அணி கண்டிப்பாக 4 போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி 2-3 என்ற கணக்கில் தோற்றால் கூட, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இரண்டாவது இடத்தைப் பிடிக்க மிகவும் குறைவான வாய்ப்பே இந்திய அணிக்கு உள்ளது.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடர் வருகிற நவம்பர் 22 ஆம் தேதி முதல் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

(Visited 4 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி