பாரிஸ் அறிமுகமாகும் இந்தியாவின் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை
இந்தியாவின் யுபிஐ எனப்படும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை பாரிஸ் ஈஃபிள் கோபுரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம், பிரான்ஸ் செல்லும் இந்தியர்கள் யுபிஐ சேவை மூலம் பணப் பரிவர்த்தனைகளை எளிதாக மேற்கொள்ள முடியும்.
ஈபிள் கோபுரத்தை பார்க்க விரும்புபவர்கள், யுபிஐ மூலம் முன்கூட்டியே பணம் செலுத்தி ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், பிரித்தானியாவில் அடுத்து யுபிஐ சேவையைப் பயன்படுத்தும் இரண்டாவது ஐரோப்பிய நாடாக பிரான்ஸ் உருவெடுத்துள்ளது.
(Visited 16 times, 1 visits today)





