ஒருநாள் தொடருக்காக இலங்கை வந்தடைந்த இந்திய அணி வீரர்கள்

இந்தியா அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
முதலில் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது.
இதனை தொடர்ந்து ஒருநாள் தொடரில் ரோகித் தலமையிலான இந்திய அணியின் களமிறங்க உள்ளது.
இந்நிலையில் ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி ஆகியோர் இன்று இலங்கை சென்றடைந்துள்ளார்.
மேலும் ஷ்ரேயாஸ் அய்யர், கேஎல் ராகுல் ஆகியோரும் இலங்கைக்கு சென்றடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் அபிஷேக் நாயர் தலைமையில் இன்று பயிற்சியில் ஈடுபடுவார்கள் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
(Visited 35 times, 1 visits today)