விளையாட்டு

இங்கிலாந்து தொடருக்கான இந்திய டி20 அணி அறிவிப்பு!

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்யவிருக்கும் இங்கிலாந்து அணி, ஜனவரி 22 முதல் பிப்ரவரி 12 வரை 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்று விளையாடவிருக்கிறது.

5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் முதலில் நடைபெறவிருக்கும் நிலையில், டி20 தொடருக்கான இந்திய அணி சூர்யகுமார் யாதவ் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

காயத்தால் ஒருவருடத்திற்கும் மேலாக இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்துவந்த முகமது ஷமி மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.

5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில், சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும், அக்சர் பட்டேல் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். விக்கெட் கீப்பர்களாக சஞ்சு சாம்சன், துருவ் ஜுரேல் இருவரும் இடம்பெற்றுள்ளனர். தமிழக வீரர்கள் வருண் சக்கரவர்த்தி மற்றும் வாசிங்டன் சுந்தருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு விஷயமாக 2023-ம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பையின் போது காயத்தால் அணியிலிருந்து வெளியேறி அறுவை சிகிச்சை செய்துகொண்ட வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி, ஒருவருட இடைவெளிக்கு பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்.

டி20 தொடருக்கான இந்திய அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சஞ்சு சாம்சன் (WK), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ரின்கு சிங், நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல் (துணை கேப்டன்), ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி, வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்).

SR

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ
error: Content is protected !!