வட அமெரிக்கா

அமெரிக்காவில் பொலிஸ் வாகனம் மோதி இந்திய மாணவி பலி; ஆதாரம் இல்லாததால் விசாரணை ரத்து!

அமெரிக்காவில் பொலிஸ் கார் மோதி, இந்திய மாணவி உயிரிழந்த விபத்து நிகழ்ந்து ஒரு மாதம் ஆன நிலையில், மாணவி உயிரிழந்தது குறித்த விசாரணை கைவிடப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரப் பிரதேசத்தை சேர்ந்த மாணவி ஜான்வி கண்டுலா (23). இவர் அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் படித்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 23ம் திகதி அங்குள்ள சியாட்டிலில் சாலையை கடக்க முயன்ற போது, கெவின் டேவ் என்ற பொலிஸ் அதிகாரி அதிவேகமாக ஓட்டி வந்த ரோந்து கார் ஜான்வி கண்டுலா மீது மோதியது. இதில் சுமார் 100 அடி தூரத்துக்கு தூக்கிவீசப்பட்ட ஜான்வி கண்டுலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஆனால், விபத்தை ஏற்படுத்திய பொலிஸ் அதிகாரி கெவின் டேவ், நிற்காமல் சென்று விட்டார். இந்த விபத்து குறித்து அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற மற்றொரு பொலிஸ் அதிகாரி டேனியல் ஆடெரர் என்பவர் ஜான்வி கண்டுலாவின் சடலத்தை கண்டு கேலியாக பேசி சிரித்தது தெரிய வந்து மேலும் அதிர்ச்சி கூட்டியது.

இந்திய மாணவி ஜான்வி கண்டுலா உயிரிழப்பு

பொலிஸாரின் உடலில் பொருத்தப்பட்ட கேமரா காட்சியை சியாட்டில் பொலிஸார் வெளியிட்ட போது, அதில், டேனியல் ஆடெரர், ஜான்வி கண்டுலாவின் சடலத்தை கண்டு அவமதிப்பாக நடந்துகொள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இதற்கிடையே இந்த சம்பவம் நிகழ்ந்து ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில், விபத்தை ஏற்படுத்திய கெவின் டேவ் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள போதிய ஆதாரங்கள் இல்லை என கூறி, கிங் கவுண்டி அரசு வழக்கறிஞர் லீசா மேனியன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் இந்திய மாணவி பொலிஸ் கார் ஏற்றி கொல்லப்பட்டது, உயிரிழந்த நிலையிலும் அவரை அவமதித்தது, இறுதியில் குற்றத்துக்கு போதிய ஆதாரம் இல்லை என விசாரணையை கைவிரித்தது என அடுத்தடுத்த சம்பவங்கள் இந்தியர்களிடையே கடும் அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!